யாருப்பா இவரு…! அப்படியே நம்ம சிவகார்த்திகேயன் மாதிரியே இருக்காரே….! செம வைரலாகும் புகைப்படம்…!!!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது தன் கடின உழைப்பினால் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

   

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் காமெடியனாக அறிமுகமாகி பின் மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு அளித்து, தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல ரசிகர் கூட்டத்தையே கொண்டுள்ளார்.

இவர் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், மடோன் அஸ்வின் இயக்கி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதீ சங்கர் நடிக்கிறார். இத்திரைப்படத்தை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் அதேபோல் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் புதிதாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் நிறைய படங்களை வைத்துள்ளார்.

சினிமா நடிகர் நடிகைகளை போலவே இருக்கும் சில நபர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும்.

அந்த வகையில் தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் போலவே இருக்கும் ஒரு நபரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது