
சீரியல்களில் வில்லியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை வந்தனா.
இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘ஆனந்தம்’சீரியல் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து இவர் ‘தங்கம்’ சீரியலிலும் வில்லியாக நடித்திருந்தார். தங்கம் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘காதல் முதல் கல்யாணம்’ வரை என்ற சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மெல்ல திறந்தது கதவு’ போன்ற பல சீரியல்களில் வில்லியாக நடித்து அசத்தியுள்ளார்.
இவர் வெள்ளித் திரையில் நடிக்கும் வில்லிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் சின்னதிரையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் சீரியலில் வில்லியாக இருக்கலாம் ஆனால் நிஜத்தில் மிகவும் அமைதியானவராம் மிகவும் பாஸ்ட்டிவான நபர்.
நடிகை வந்தனா கதைக்கு ஏற்றவாறு எல்லா எக்ஸ்ப்ரசன்களையும் தன்னுடைய பார்வையிலேயே காட்டுவதால் வந்தனாவுக்கு நிறைய வில்லி கேரக்டர் வாய்ப்புகள் வருகிறதாம்.
‘நானும் நந்தினியும்’ என்ற படத்தில் நடித்த மைக்கேல் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இதன் பிறகு சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் கணவருடன் இணைந்து விஜய் டிவியில் ‘பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்’ என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.
இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக உள்ளவர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.