ஹீரோயின் போல ஜொலிக்கும் நடிகர் அஜித்தின் மகள்… அம்மாவை மிஞ்சும் பேரழகு… லேட்டஸ்ட் கிளிக்…

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

   

இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் அஜித் ஏ கே மோட்டோ ரைடு எனும் நிறுவனம் ஒன்றை  தொடங்கினார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வந்தது. நடிகர் அஜித் நடிகை  ஷாலினியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தற்பொழுது நடிகை ஷாலினியின் சகோதரி ஷாமிலி SHE  என்ற பெயரில் ஆர்ட் எக்ஸிபிஷன் ஒன்றை  நடத்தியுள்ளார். இந்த விழாவில் ஷாலினி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது இயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை ஷாலினி மற்றும் அவரது மகள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நம்ம தல அஜித்தின் மகளா இது?’ என்று ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்….