
நடிகர் அஜித் தனது மகள், மனைவி மற்றும் மகனுடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் தற்பொழுது ‘துணிவு’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் துணிவு திரைப்படத்தை எதிர்பார்த்து மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.
நடிகர் அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். சமீபத்தில் இவர் இன்ஸ்டாகிராமில் தனக்கென ஒரு புதிய கணக்கை தொடங்கினார். இந்த செய்தி இணையத்தில் வெளியாகி படுவைரல் ஆனது. இதைத் தொடர்ந்து தற்பொழுது வரை அவரை பல்லாயிரக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
பிரபலங்கள் பலரும் தங்களது புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் இணைந்து புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இதில் அவர் தனது குடும்பத்தோடு இணைந்து எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் நடிகர் அஜித்தின் மகளைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகின்றனர். நடிகர் அஜித்தின் மகள் ஹீரோயின் போல அவ்வளவு அழகாக இப்புகைப்படத்தில் காணப்படுகிறார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவைரல் ஆக்கப்பட்டு வருகிறது.