அஜித் – ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஷாலினி, சிறுவயதிலேயே, மக்கள் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து, பின் தளபதி விஜய் அவர்களுடன் காதலுக்கு மரியாதை படத்தில் நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு இவர் அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தபோது தான், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் கடந்த 2000 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்திற்கு பின் நடிகை ஷாலினி சினிமாவில் நடிக்கவில்லை. இவர்களுக்கு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே இவர்களின் மூத்த மகளான அனோஷ்கா தனது இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவா இருந்து, தனது தாய், தந்தை ஆகிய இருவருடைய புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.


இவர் தற்போது லண்டனில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டா பதிவில் Date Night என குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இவர் தற்போது டேட்டிங் செய்து வருவதாகவும், ஆனால் யாருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர். மேலும் அந்த நபர் யார் என தெரிந்து கொள்ள நெட்டிசன்கள் ஆர்வமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.