
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் ஷாலினி .இவர் பேபி ஷாலினியாக குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இவரது மூன்று வயதில் இருந்தே நடிக்க தொடங்கினார். விடுதலை, ராஜா சின்ன ரோஜா, பந்தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் 25 மேற்பட்ட திரைப்படங்கள் நடித்துள்ளார் ஷாலினி .
இவர் தமிழில் கதாநாயகியாக காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும், என பல படங்கள் நடித்துள்ளார்.
அலைபாயுதே படத்திற்கு சிறந்த நடிகைக்கான தமிழக அரசின் சிறப்பு பரிசை பெற்றார்.
தமிழ், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து உச்சத்தை எட்டினார் ஷாலினி.
தமிழ் திரைப்பட நடிகர்களில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் ஹைதராபாத்தைச் சார்ந்தவர்.
தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் ‘பவித்ரா’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
இவர் தமிழில் காதல் கோட்டை, வாலி ,அமர்க்களம் ,பூவெல்லாம் ,உன் வாசம், வில்லன் வரலாறு கிரீடம் . மங்காத்தா, விசுவாசம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தமிழ் ,தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் மட்டும் அல்ல ஒரு நல்ல மோட்டார் பந்தய வீரரும்கூட.
இவர் ‘வாலி’ படத்திற்காக சிறந்த தமிழ் நடிகர் பிலிம்பேர் விருதை பெற்றுள்ளார். 2000 ஆம் ஆண்டு ‘முகவரி’ படத்திற்காக எக்ஸ்பிரஸ் சிறந்த நடிகருக்கான விருது பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து இவர் பல விருதுகளை வென்றுள்ளார். அஜித் மற்றும் ஷாலினி இருவரும் முதன் முதலில் சேர்ந்து நடித்த படம் ‘அமர்க்களம்’.இப்படம் மாபெரும் வெற்றியை அடைந்தது.
நடிகர் அஜீத்தின் முக்கிய வெற்றி படமாக ரசிகர் மத்தியில் இப்படம் பார்க்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே சுமார் 28 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தின் மூலமாக அஜீத் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
நடிகை ஷாலினி அஜித்தை திருமணம் செய்த பிறகு சினிமா துறையில் இருந்து தன்னை விலகிக் கொண்டார்.
இப்போது தன் குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார் ஷாலினி. இவருக்கு அனுஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களின் அழகிய திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.