தன்னை பார்க்க வந்த ரசிகரை… காவல்துறையினரை கூப்பிட வைத்து… ஓங்கி அடித்த அஜீத்குமார்… ஏன் இப்டி செஞ்சாரு…?

நடிகர் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதனைத்தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு திரைப்படத்திற்கு பூஜை போடப்பட்டிருக்கிறது. அஜித் எந்தவித நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார்.

   

தன் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழாக்களில் கூட அவர் பங்கேற்பதில்லை. அவரைப் பொறுத்தவரை திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே தன் வேலையாக கருதுகிறார். மேலும், தனக்காக தன் ரசிகர்கள் ரிஸ்க் எடுப்பதையும் விரும்ப மாட்டார். இந்நிலையில் நடிகை ஆர்த்தி சமீபத்தில் பங்கேற்ற பேட்டியில், அஜித் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, அஜித் சார் ஒரு திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருந்தார். அப்போது ஒரு ரசிகர் தன் தலையில், “தல” என்ற எழுத்து வடிவத்தில் முடியை வெட்டி இருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த போதும், அஜித் அதனை கவனித்துவிட்டார். அந்த ரசிகரை மட்டும் வரச் சொல்லுங்கள் என்று காவல்துறையினரிடம் கூறினார்.

அந்த ரசிகர் வந்தவுடன் அவரை ஓங்கிக் கன்னத்தில் அடித்துவிட்டார். அது மட்டுமல்லாமல் உதவியாளரை உடன் அனுப்பி அந்த ரசிகரை மொட்டை அடிக்குமாறு கூறினார். அவரும் அஜித் சொன்னது போலவே மொட்டை அடித்து விட்டார். அதன் பிறகு, அந்த ரசிகருடன் புகைப்படம் எடுத்தார்.

மேலும், அந்த ரசிகர்களிடம் தல என்று நீ முடி வெட்டி இருப்பதை உன் பெற்றோர்கள் விரும்ப மாட்டார்கள். என் மீதான உன் அன்பு மனதில் இருந்தால் போதும் என்று அமைதியான முறையில் பேசி அனுப்பிவிட்டார் என்று ஆர்த்தி கூறியிருக்கிறார்.