
அமலாபால்
தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால்,மைனா படத்தின் மூலம் பிரபலமானவர். மேலும் தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இவர் மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து, பின் விவாகரத்து செய்த நிலையில், தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்போது பட வாய்ப்பில்லாமல் ஆண் நண்பர்களுடன் அவுட்டிங், பார்ட்டி, போட்டோஷூட் என பிஸியாக உள்ள அமலா பால், இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பட வாய்ப்பில்லாமல் இருக்கும் இவர், மண்பாண்டம் செய்யும் வேலையை ஆரம்பித்துள்ளதாக, புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ஆனால், இது ஒரு போட்டோஷூட்டிற்கு எடுக்கப்பட்ட மண்பாண்டம் செய்யும் ஸ்கில் என கூறியுள்ளார். மேலும் அந்த ஷூட்டிங் வீடியோவை தான் அமலா பால் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,