இயக்குனர் மற்றும் நடிகர் அருண் ராஜா காமராஜின் மறைந்த மனைவியா இவர் ?… என்ன அழகான புகைப்படம்…

தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் அருண் ராஜா காமராஜ். இவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்.

   

தனது பள்ளி படிப்பை குளித்தலை அரசு மேல்நிலைப் பள்ளியில் முடித்தார். தனது உயர் பள்ளி படிப்பை   திருச்சி பிஷப் ஹெபேர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

இவர் தனது கல்லூரி படிப்பை திருச்சியில் உள்ள  ஜே ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி படிப்பை முடித்தார் .

அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ என்ற படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

அதன் பின் தமிழில்  மரகத நாணயம் ,நட்புனா என்னன்னு தெரியுமா, கா பெ ரணசிங்கம், மான் கராத்தே,  உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்குனர் மட்டுமல்ல நடிகர், பாடகர் ,பாடலாசிரியர், எழுத்தாளர், இயக்குனர் பல்வேறு பரிமாணத்தில் தோன்றி ரசிகர்களை மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் ‘கபாலி’ படத்தில் ‘நெருப்புடா நெருங்குடா’ பாடல் எழுதி உலக அளவில் மிகப் பிரபலமாக திகழ்ந்தார்.

இதை தொடர்ந்து விஜய் நடித்த’ பைரவா’ படத்தில் ‘வரலாம் வரலாம் வா பைரவா’ பாடலை எழுதி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது .

பின்பு சிவகார்த்திகேயன் பெண்கள் மையப்படுத்தி எடுத்த கிரிக்கெட் படமான ‘கனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இவரின் முதல் படமே வணிக ரீதியாக வெற்றியை கண்டது. இயக்குனர் அருண் ராஜா  காதலித்து சிந்துஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரது மனைவி கொரோனா தொற்றின் காரணமாக காலமானார் .தற்போது இவர்களின் புகைப்படமான குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகியுள்ளது.