கமலின் அட்டகாசமான படத்தோட ரீமேக்… தட்டி தூக்கிய அசோக் செல்வன்.. என்ன படம் தெரியுமா.?

நடிகர் அசோக் செல்வன் வளர்ந்து வரும் இளம் கதாநாயகனாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருகிறார். தமிழ் திரையுலகில் சூதுகவ்வும் திரைப்படத்தின் அறிமுகமான அவர் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டார்.

   

அவரின் போர் தொழில் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றது. அத்திரைப்படத்திற்கு பிறகு, அவரின் மார்க்கெட் நன்றாக உயர்ந்திருக்கிறது. மேலும், சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனர் அசோக் செல்வனை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்குவதாக வலைப்பேச்சு சக்திவேல் தகவல் வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, அசோக் செல்வன் போர் தொழில் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் கமலஹாசனின் சத்யா திரைப்படத்தின் ரீமேக் என்று கூறியுள்ளார்.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் கடந்த 1998 ஆம் வருடத்தில் வெளிவந்த சத்யா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்றளவும் அத்திரைப்படம் ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.