நடிகர் பரத்தின் தங்கையை பார்த்துள்ளீர்களா…. முதல் முறையாக வெளிவந்த போட்டோ…!!

நடிகர் பரத்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பரத், 1980 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் பரத் சீனிவாசன் என்ற பெயரில் பிறந்தார். பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தனது 11வது வயதில் ஸ்விங்கர்ஸ் இன்டர்நேஷனல் டான்ஸ் கிளப்பில் சேர்ந்தார். அவர் தனது பள்ளிப்படிப்பை DAV மூத்த மேல்நிலைப் பள்ளியில் பயின்றார், மேலும் இவர் ஒரு கால்பந்து ரசிகர். இவருக்கு ப்ரீத்தி என்ற தங்கை இருக்கிறாள். இவரது தாய்மொழி தமிழ்.

 

   

பின்னர் இவர் துபாயில் உள்ள மலையாள பல் மருத்துவரான ஜெஷ்லியை 2013 ஆம் ஆண்டு, சென்னையில் திருமணம் செய்து கொண்டார். பரத்துக்கு ஆகஸ்ட் 2018 இல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். இவர் தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்து, செல்லமே, காதல், பட்டியல், எம் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்தார். பின்  சமீபத்தில் தான் தன்னுடைய 50 வது படத்தையும் வெளியிட்டார். இவர் மலையாளம் , ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

MudOff: Tamil Actor Bharath Profile

பரத்தின் தங்கை

பரத், வாணி போஜன் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த லவ் படம் தான் இவரது 50வது திரைப்படமாகும். ஆனால் இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை எனினும் தற்போது முன்னறிவான் எனும் படத்திலும் பரத் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் பரத் தனது தங்கை ப்ரீத்தியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.