காதல் பட புகழ் நடிகர் பரத்தின் மகன்களை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே.. வெளியான போட்டோஸ்…!

நடிகர் பரத்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான பரத், 1980 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள திருச்சியில் பரத் சீனிவாசன் என்ற பெயரில் பிறந்தார். பயிற்சி பெற்ற நடனக் கலைஞரான இவர், தனது 11வது வயதில் ஸ்விங்கர்ஸ் இன்டர்நேஷனல் டான்ஸ் கிளப்பில் சேர்ந்தார். மேலும் இவர் ஒரு கால்பந்து ரசிகர். இவருக்கு ப்ரீத்தி என்ற தங்கை இருக்கிறாள். இவரது தாய்மொழி தமிழ். இவர் தமிழ் சினிமாவில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்து, செல்லமே, காதல், பட்டியல், எம் மகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல பிரபலத்தை அடைந்தார். பின்  சமீபத்தில் தான் தன்னுடைய 50 வது படத்தையும் வெளியிட்டார். இவர் மலையாளம் , ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

Bharath (aka) Actor Bharath

   

 

குடும்பம்

இவர் தனது சிறு வயது தோழியான ஜெஷ்லியை 2013 ஆம் ஆண்டு, சென்னையில் திருமணம் செய்து கொண்டார். பரத்துக்கு ஆகஸ்ட் 2018 இல் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது நடிகர் பரத் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ,