மலையாள நடிகர் கொச்சின் ஹனீபாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் முன்னணி  நடிகர்களில் ஒருவர் நடிகர் ஹனீஃபா. இவர் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல்  22 ஆம் தேதி பிறந்தார்.

இவர் கேரளாமாநிலத்தை  பூர்வீகமாகக் கொண்டவர். இவர் Botany பட்டப்படிப்பை படித்து முடித்தார்.

இவரின் இயற்பெயர் சலீம் அகமது கோஷ் .இவருக்கு நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக கலாபவன் அமைத்து நடத்தும் நாடகங்களில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

இவர்  ஒரு நாடகத்தில் ஹனீபா என்ற கதாபாத்திரத்தில்  நடித்தன்  மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.

இந்த காரணத்தினால்  தன் ஊர் பெயரையும் , கதாபாத்திர பெயரையும் சேர்த்து கொச்சி ஹனீபா என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்

1976 களில் சென்னை வந்தார் ஹனீபா அப்போது நமது  வில்லன் நடிகரான R.S .மனோகரின் தம்பி சீனிவாசன் தயாரித்த மலையாளத் திரைப்படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதி அப்படியே நடிக்கவும் தொடங்கினார்.

இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘அஷ்தவக்ரம்’ என்ற திரைப்படத்தின் மூலமாக மலையாளத்தில் உலகில் அறிமுகமானார்.

அதன் பிறகு  ‘மங்கம்மா” என்னும் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்.

இவர் மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.  17 மலையாள திரைப்படங்களுக்கு கதை எழுதி இருக்கிறார்.

இவர் மலையாளத்தில்7 திரைப்படங்களையும், தமிழில் 6 திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் 2001 ஆம் ஆண்டு வெளியான ‘சூத்ரதாரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து  சிறந்த துணை நடிகருக்கான மாநில அரசின் விருதைப் பெற்றார்.

இவர் முதலில் வில்லனாக நடித்தார்.  அதன் பிறகு நகைச்சுவை நடிகராகவும் திரையுகில் நடித்து வந்தார்.

இவர் தமிழ், மலையாளம், இந்தி  என்ற மூன்று மொழிகளில் படங்களிலும் மிகவும் பிரபலமாக வலம் வந்தார்.

இவர் கே பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான  ‘வானமே எல்லை’ என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றார்

இவர் தமிழில்  மகாநதி, சிறைச்சாலை, காதலுக்கு மரியாதை போன்ற பல படங்களில் நடித்துள்ளார்

இவர் நடிகர் விஜயுடன் ‘வேட்டைக்காரன்’ படத்திலும்  ஆர்யாவுடன் ‘மதராசப்பட்டினம்’ படத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் ஹனீபா ஃபாசிலாஎன்பவரை  திருமணம் செய்து கொண்டார். இவருக்கு திருமணம்  16 வருடங்கள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர்

இவர் கல்லீரலில் புற்றுநோயால் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

தற்போது இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.