வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து… தனது உடலை ஜிம் பாடியாக மாற்றிய நடிகர் துருவ் விக்ரம்… அவரா இது?…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். தான் நடிக்கும் படங்களில் எல்லாம் அப்படங்களின் கதாபாத்திரத்திற்காக, எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். அதேபோல தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசம் காட்டி நடிப்பவர். இவர் நடிப்பில் இறுதியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

   

இவரை போலவே இவரது மகன் துருவ் விக்ரமும் தற்பொழுது சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.  இவரது மகனான துருவ் விக்ரம் ‘ஆதித்யவர்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். இதை தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு பெரிய அளவு வெற்றியை தேடி தரவில்லை. தற்பொழுது சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று வெறித்தனமாக போராடி  வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இவர் தற்பொழுது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

இத்திரைப்படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்து தனது உடலை செம பிட்டான ஜிம் பாடியாக மாற்றியுள்ளார். இத்திரைப்படம் நடிகர் துருவ் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இத்திரைப்படம் கபடி விளையாட்டை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்பொழுது இத்திரைப்படத்திற்காக கபடி பயிற்சி செய்து தனது உடலை மெருகேற்றி உள்ளார் நடிகர் துருவ் விக்ரம். இவரது லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் விக்ரமின் மகனா இது?’ என ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த புகைப்படம்….