நடிகை ஹன்சிகாவா இது… திருமணத்திற்கு பின் ஆள் அடையாளமே தெரியல.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!!

ஹன்சிகா

தமிழ் சினிமாவில் வெகு சீக்கிரமே விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து, குறுகிய காலத்திலேயே பிரபலமானார் நடிகை ஹன்சிகா.

   

இவர் 2011ல் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை, ஜெயம் ரவியின் எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்து அறிமுகமாகி, பின் அந்த சமயத்தில் ஒரு சில நடிகர்களுடன் காதல் கிசுகிசுப்பிலும் பேசப்பட்டு வந்தார்.

ஆனால் அவர்களுக்கு அல்வா கொடுத்துவிட்டு, பணக்கார தொழிலதிபரான சோஹைல் கத்தூரியா-வை கடந்த டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் முதலில் உடல் எடையை அதிகரித்து பின், மீண்டும் ஒல்லியாக மாறி வந்த ஹன்சிகா தன்னுடைய 50-வது படமான மஹா என்ற படத்தின் மூலம்  சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.

மேலும் கல்யாணத்திற்கு பின், கமிட்டாகிய படங்களில் நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா, இதுவரை இல்லாத அளவிற்கு படுஒல்லியாக மாறி ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருக்கிறார்.