6 லட்சம் மதிப்புள்ள புதிய விளையாட்டு பொருளை வாங்கிய நடிகர் ஜீவா… 6 லட்சமா? அந்த பொருளில்  அப்படி என்ன ஸ்பெஷல்னு உங்களுக்கு தெரியுமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜீவா. இவரின்  நிஜ பெயர் அமர் சவுத்ரி. அவரது அப்பா ஆர்.பி. சவுத்ரி ஒரு பெரிய தயாரிப்பாளர். அப்பா ராஜஸ்தானை சேர்ந்தவர், அம்மா தமிழ். அவர் அப்பா சினிமாவில் இருக்கிறார் என்பதால் ஜீவாவுக்கு  முதல் வாய்ப்பு எளிதில் கிடைத்து இருக்கலாம். ஆனால் அவர் தற்போது வரை சினிமாவில் நிலைத்திருக்க காரணம் அவரது நடிப்பு மட்டும் தான்.

   

இருந்தாலும் சமீப காலமாக அவர் பெரிய ஹிட் கொடுக்கமுடியாமல் மல்டிஸ்டாரர் படங்களில் தான் தலையை காட்டி வருகிறார். ஜீவாவின் சகோதரர் ஜித்தன் ரமேஷும் நடிகராக தான் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜீவா கிரிக்கெட் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர். அவர் சிசிஎல் என்ற நடிகர்கள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடி இருக்கிறார்.


நடிகர் ஜீவா காதல் திருமணம் தான் செய்துகொண்டார். அவர் 6ம் வகுப்பு படிக்கும்போது தான் சுப்ரியாவை சந்தித்தார். அவர்கள் அப்போது இருந்தே நண்பர்கள் ஆக, அதன் பின் காதலர்களாக மாறி திருமணமும் செய்துகொண்டனர். முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், சூர்யா, தனுஷ், விஷால், சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தயாரிப்பாளர்களாக மாறி தொடர்ந்து படங்கள் தயாரித்து வருகின்றனர்.

இந்த பட்டியலில் தற்போது நடிகர் ஜீவாவும் இணைந்துள்ளார். ‘ சூப்பர்குட் ஸ்டூடியோ’ என்ற பெயரில் பட நிறுவனம் தொடங்கி தயாரிப்பு தொழிலில் ஜீவா இறங்குகிறார். இவரது தந்தை ஆர்.பி.சவுத்ரி சூப்பர் குட் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் ஜீவா தான் புதிதாக வாங்கிய 6 லட்சம் மதிப்புள்ள ‘சாம்சங் f6 ‘ ரக காமெராவின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்து ‘new toy ‘ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இதோ  அந்த புகைப்படம்…