நடிகை ஜீவிதா
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஜீவிதா, கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர். மேலும் இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல், சினிமாக்களிலும் கூட கவனம் செலுத்திய நிலையில், கடந்த 2018 -ம் ஆண்டு வெளிவந்த கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடிகர் கார்த்திக்கு அக்கா ரோலில் சிறப்பாக நடித்திருப்பார்.
இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜீவிதா, சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றியும், சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்கள் குறித்து பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும் போது, ஒரு நாளைக்கு மட்டும் ரூபாய் 40,000 சம்பளம் என்றும் ஆனால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்றும் கூறினார்கள். அதற்கு நான் நோ சொல்லிவிட்டேன். அதன் பின் ஒரு நாளைக்கு நடிப்பதற்கு 10,000 மட்டும் சம்பளம் எனவும் கூறினார்கள். இவ்வாறு ஜீவிதா கூறியுள்ளார்.