இந்த புகைப்படத்தில் கியூட்டாக இருக்கும் இந்த சிறுகுழந்தை யார் தெரியுமா?… அட இவர் ஒரு பிரபல முன்னணி நடிகரா?…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் இயக்குனர் மணிரத்தினத்தின் கனவுபடமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

   

இளவரசனாக மக்கள் மனதில் இடம் பிடித்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் தற்போது உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2ம் பாகம், இறைவன், அகிலன், சைரன் என அடுத்தடுத்த படங்களில் பிசியாக தற்பொழுது நடித்துக் கொண்டு வருகிறார். இதில் ‘இறைவன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள அகிலன் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படம் மட்டுமின்றி இந்த ஆண்டு இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. சோசியல் மீடியாவில் கடந்த சில நாட்களாக பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் ஜெயம் ரவியா இது? இவ்ளோ கியூட்டா இருக்காரே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த கியூட் புகைப்படம்…