கல்யாணமாகி இவ்ளோ வருஷம் கழிச்சி.. ஜெயம் ரவிக்கு மாமியார் கொடுத்த விலையுயர்ந்த பரிசு… விலையை கேட்டா ஆடிப்போய்டுவீங்க..!

கடந்த 2003 ஆம் வருடத்தில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ரவி. அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றதால் அதன் பிறகு அவரின் பெயர் ஜெயம் ரவி என்று ஆனது.

   

தொடர்ந்து பல திரைப்படங்களில் தன் தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். தற்போது, தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

எனினும் சமீப காலமாக அவர் நடித்த மூன்று திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. ஜெயம் ரவி மீண்டும் ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்நிலையில் ஜெயம் ரவிக்கு அவரின் மாமியார் ஒன்றரை கோடி ரூபாயில் வாட்ச் வாங்கி கொடுத்திருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

அதாவது ஜெயம் ரவி மனைவியின் அம்மா தான் அவரின் பல படங்களை தயாரிக்கிறார். அந்த வகையில் சைரன் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான். எனவே ஜெயம் ரவிக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் வாட்ச் ஒன்றை பரிசளித்திருப்பதாக அந்தணன் கூறியுள்ளார்