ஜோதிகா
2000 ஆண்டின் கனவு கன்னியான இவர், அதிக கவர்ச்சி இல்லாமல் தனது முட்டைக்கண்ணை வைத்து நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். மேலும் நடிகர் சூர்யாவை காதலித்து கரம்பிடித்தார்.
பின் இவர் பல ஆண்டுகளுக்கு பின், 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ட்ரி ஆனார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். இவரின் தற்போதைய வயது 45 என்றாலும் இளமை மாறாமல், அதே அழகுடன் ஜொலித்து, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், குடும்பத்தை பார்த்து வந்த ஜோதிகா தற்போது மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். மேலும் இவரிடம் தமிழில் பல படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில் ஜோதிகா முன்பு படங்களில் நடிக்காமல், சூர்யாவுடன் பிரேக் எடுத்திருந்த போது, விளம்பர படங்களில் நடித்து வந்ததாகவும், தற்போதும் அதை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது நடிகர் மிர்ச்சி செந்திலுடன் இணைந்து, பிஸ்கெட் விளம்பரத்தில் நடித்துள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சரவணன்-மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமானவர். இந்த தொடரில் நடிக்கும் போது, அவருடன் நடித்த நாயகி ஸ்ரீஜாவை, காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது அனைவரும் அறிந்தே. ஜோதிகாவுடன் விளம்பரத்தில் நடித்துள்ள போட்டோவை, மிர்ச்சி செந்தில் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,
Jyothika mam's new ad ❣️#Jyothika #Jyotika #Jothika #SuriyaSivakumar #Suriya #Kanguva #KaathalTheCore #Vaadivaasal #SRI pic.twitter.com/mbqhnL1r3b
— Jyotika Fans Club (@JyotikaSuriyaa) September 18, 2023