எனக்கு தற்கொலை எண்ணம் வந்துச்சு….ஷாக் நியூஸ் சொன்ன  நடிகர் கமலஹாசன்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கமலஹாசன்.  இவரை உலக நாயகன் என்று இவரது  ரசிகர்கள் அழைப்பார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் கமல்ஹாசன்.  1960 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா படத்தில் தோன்றிய கமலை இன்று வரை பலராலும் மறக்கவே முடியவில்லை. அதன்பின்னர், சினிமாவில் அவர் செய்யாத சாதனை இல்லை.

   

நடன இயக்குனராக, இயக்குனராக, நடிகராக, பாடகராக சினிமாவில் அவர் செய்யாத வேலையே இல்லை. தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பங்களை டெஸ்ட் செய்த பெருமை கமலையே சேரும். கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.

234வது படமாக மணிரத்னம் இயக்கும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு மேடையில் கமல் பேசிய விஷயம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், எனக்கும் 21 வயதில் தற்கொலை எண்ணம் வந்துச்சு. சினிமா வாய்ப்பு கிடைக்கல செத்துடலாம்னு நினைச்சேன். ஆனால் இயற்கை கொடுத்த வாழ்க்கையை ஏன் அழிச்சிக்கணும்.