தனது மனைவியுடன் அவுட்டிங் சென்றுள்ள ‘எதிர்நீச்சல்’ சீரியல் ஞானம்…  வெளியான அழகிய புகைப்படங்கள்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஞானசேகரன் கேரக்டரில் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான கமலேஷ். தற்போது ஞானம் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலின் மூலமாக அதிகமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர்.

   

பல வருடங்களாக இவர் சின்னத்திரை வெள்ளி திரையில் நடித்துக் கொண்டிருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றன. சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போதும் பிரபலங்களோடும் தன்னுடைய குடும்பத்தோடும் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கமலேஷ் ஜி தமிழ் டிவி சேனலில் சூப்பர் சிங்கர் செலிப்ரட்டி என்ற போட்டியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார்.

அப்போது அதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு பிரபலமான சிந்துஜாவை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பல சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் கமலேஷுக்கு கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு தான் பெண் குழந்தை பிறந்தது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் கமலேஷ்.

இவர் அவ்வப்பொழுது தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது தனது மனையுடன் அவுட்டிங் சென்ற அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.