அட அப்படியா..!! கல்யாணத்திற்கு முன்னாடி குழந்தை… 43 வயதில் டைவர்ஸ்.. உலக நாயகனின் 2-வது காதல் கதை…!!

கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன், தமிழ் திரையுலகில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். இவரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்ற அளவில் பிரபலமானவர். இவர் 70, 80 ஸ்களில் ரொமாண்டிக் ஹீரோவாக பல திரைப்பங்களில் நடித்து கலக்கி வந்தார். மேலும் இவர் ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு வித்தியாசமான கருத்துக்கள் மற்றும் தொழிநுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தியிருப்பார்.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

   

பிரபல தொலைக்காட்சியில் பெரிய நிகழ்ச்சியொன்றையும் தொகுத்து வழங்கிய இவருடைய நடிப்பில் தற்போது விக்ரம் திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. தமிழ் சினிமாவில் அந்த காலத்தில், காதல் மன்னனாக நடித்து, பல நடிகைகளுடன் கிசுகிசு தகவல்களும் வெளிவந்த நபராக இருந்தார்.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

கமல்-சரிகா காதல் கதை

இவர் 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை முதலில் திருமணம் செய்து கொண்ட பிறகு, 1988ஆம் ஆண்டு நடிகை சரிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும்  கமல்-சரிகாவுக்கு பிறந்தவர்கள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள்.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

சரிகாவும்  கமலும் சினிமாவில் இருக்கும் போது காதலித்தனர். பின் இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்த சமயத்தில் தான் ஸ்ருதிகாசன் பிறந்துள்ளார். எனவே குழந்தை பிறந்ததும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என சிந்தித்துக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டாவது குழந்தையாக அக்ஷராவும் பிறந்ததாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் 2ஆவது காதல் கதை

இதையடுத்து இரு குழந்தைகள் பிறந்த பின்பு தான், 1988ஆம் ஆண்டு சிவாஜி முன்னிலையில் திருமணம் செய்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. மேலும் கமல் மீது இருந்த காதலால் எல்லாவற்றையும் விட்டு வந்த சரிகா, தனது 43ஆவது வயதில், அதாவது 2004ஆம் ஆண்டு, அவரை டைவர்ஸ் செய்துள்ளார். ஆனாலும்  கமல் தன் இரு மகள்களுடன் இன்று வரை, நெருக்கமாகவும், அன்பாகவும் பழகி வருகிறார்.

குடும்ப உறவினர்களுடன் ...