என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு… பேட்டி அளித்த நடிகர்…!!

நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரும், பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் மதுரையை  சேர்ந்தவர். 1988 இல் டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தின் மூலமாகத் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார். வடிவேலு தனது அசாத்தியமான நகைச்சுவை கலந்த நடிப்புத் திறமையால் வைகைப்புயல் என்றும் அழைக்கப்படுகிறார்.

என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு

   

இவர் தற்போது மாமன்னன் படத்தின் மூலம் குணச்சித்திர நடிகராகவும், எல்லோரையும் கவர்ந்து இருக்கும் நிலையில், இதை பார்த்து பல்வேறு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் பலருக்கும் தெரியாத வடிவேலுவின் இன்னொரு முகத்தை பற்றி நடிகர் காதல் சுகுமார் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார்.

ரத்தம் வரும் அளவுக்கு அடிச்சாங்க..

சுகுமார், வடிவேலு போலவே தோற்றத்தில் இருந்ததால் அவர் ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஊர்வம்பு நிகழ்ச்சியில் வடிவேலு போலவே perform செய்து வந்தார். அதன் மூலமாக அவருக்கு பல்வேறு பட வாய்ப்புகளும் பல கம்பெனிகளில் இருந்து வர தொடங்கி இருக்கிறது. அப்போது வடிவேலு உடன் இருக்கும் நடிகர்கள் 2 பேர் வந்து சுகுமாரை வடிவேலுவிடம் அழைத்து சென்றதாக கூறியுள்ளார்.

Kadhal Sukumar - Alchetron, The Free Social Encyclopedia

‘என்னை மாதிரி நடிப்பேன்னு கம்பெனி கம்பெனியா போய் சொல்லிட்டு இறுக்கியாமே’ என வடிவேலு மிரட்டியதாகவும் கூறினார். அப்போது அங்கிருந்தவர்களை எல்லாம் வெளியில் அனுப்பிவிட்டு, சுகுமாரை வடிவேலுவின் ஆட்கள் தாக்கினார்களாம். பின் ரத்தம் வரும் அளவுக்கு அடித்து தான் அனுப்பினார்கள் என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

காதல் பட நடிகர் சுகுமார் டைரக்ட் செஞ்ச 2 படம் பற்றி தெரியுமா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே! - Cinemapettai

இந்த அவமானத்தால் தவறான முடிவை எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டேன். பின் என் மனைவி தான் என்னை தடுத்தார் என்றும் அதற்கு பிறகு தான் காதல் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இதற்கு முன் இருந்த வடிவேலு சாயலே தெரியக்கூடாது என இயக்குனரிடம் சொல்லி, முற்றிலும் வேறு விதமாக நடித்தேன்.  இவ்வாறு சுகுமார் பேட்டியில் தெரிவித்து உள்ளார்.