சீரியல் நடிகை மகாலட்சுமி, ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் பரவி பரபரப்பை கிளப்பியது. மேலும் இவரின் இரண்டாம் திருமணத்திற்கு சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதை இருவரும் கண்டுகொள்ளாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் லிப்ரா தயாரிப்பு நிறுவனத்தை ரவீந்தர் நடத்தி வந்தார். அதில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று கூறி, பாலாஜி என்பவரிடம் இருந்து ரூபாய் 16 கோடி வரை பணமோசடி செய்ததாக ரவீந்தர் மீது புகார் எழுந்த நிலையில், போலீசார் அவரை பொறிவைத்து பிடித்து சிறையில் அடைத்தனர்.
தற்போது அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வரும் நிலையில், சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் மகாலட்சுமி, ரவீந்தர் கைதுக்கு பின் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்தும், “எல்லாம் கடந்து போகும்” என்றும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், கணவன் சிறையில் தவிக்கும் நிலையில், சிரித்தபடி இப்படி போஸ் கொடுத்த மகாலட்சுமியை பார்த்து வியப்படைந்து வருகின்றனர். இதோ அந்த பதிவு.