
வைரல் புகைப்படம்
திரையுலகை சேர்ந்த முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் டிரண்டாகி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்களால் சோசியல் மீடியாக்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுவயது நட்சத்திரம் யார் என ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். இவரை தெலுங்கு திரையுலகம் சூப்பர் ஸ்டார் என கொண்டாடி வருகிறது.
அட இவரா
அட ஆமாம், இவர் வேறு யாருமில்லை நடிகர் மகேஷ் பாபு தான். இந்த புகைப்படம் குழந்தை நட்சத்திரமாக மகேஷ் பாபு நடித்தபோது எடுக்கப்பட்டது தான். மேலும் இவர் நடிப்பில் அடுத்த படம் குண்டூர் காரம் உருவாகி வருகிறது. இவர் தெலுங்கு முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார்.
இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் ராஜகுமாருடு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.