‘எதிர்நீச்சல்’ பிரபல சீரியல் நடிகரின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?… ‘3 நாட்களாக 3 வேளையும் ஊறுகாய் சாப்பிட்டு மயங்கி விழுந்தேன்’… அவரே கூறிய அதிர்ச்சி தகவல் இதோ…

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல்களில் ஒன்று ‘எதிர்நீச்சல்’. இந்த சீரியலில் ‘குணசேகரன்’ என்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மாரிமுத்து.இவர் ஒரு நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக பல திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

   

கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் ‘யுத்தம் செய்’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். வெள்ளித்திரையில் கொடிக்கட்டி பறந்த இவர் தற்பொழுது சின்ன திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் வில்லனாக மிரட்டி வருகிறார்.

தான் அறிமுகமான முதல் சீரியலிலேயே நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார். இந்த சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம்  ‘குணசேகரன்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்துவின் இயல்பான நடிப்பே என்று பலரும் கூறுகின்றனர்.

இந்த சீரியலில் அவர் தனது வில்லத்தனமான நடிப்பை எதார்த்தமாக காட்டியுள்ளார் குணசேகரன். மேலும் இவர் தன் தம்பிகளையும் தன் பேச்சை தட்டாமல் கேட்கும்படி நடத்திவருகிறார்.

குடும்பத்திற்கு வாழ வந்த பெண்களையும் அடிமைப்படுத்தி வருகின்றார். சீரியலில் வில்லனாக நடித்து வரும் இவர்  நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று பலரும் எண்ணுகின்றனர்.  ஆனால் அவர் நிஜத்தில் மிகவும் அன்பானவராம். இவரின் வில்லத்தனத்தினால் இந்த சீரியலின் சுவாரசியமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் ‘சாய் வித் சித்ரா’ எனும் நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து பேசுகையில், ”நான் தேனியிலிருந்து சென்னைக்கு வந்த போது ஒரு மேன்ஷனில் தங்கியிருந்ததாகவும், அங்கிருந்தபடியே ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி வேலை தேடி கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

மேலும் ஹோட்டலில் சாப்பிட செல்ல காசு இல்லாமல்  தனது அறையில் இருந்த ஊறுகாயை  3 வேளையும், 3 நாட்களுக்கு சாப்பிட்டதாகவும் கூறினார்.பிறகு 4ஆவது நாள் வயிற்றுபோக்கு ஏற்பட்டு மயங்கி விழுந்த அவரை மீட்ட அவரது  நண்பர்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவ்வாறு தன் வாழ்க்கையில் நடந்த சோகத்தை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் கூறி மனதை கலங்கச் செய்துள்ளார் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் மாரிமுத்து.