இதை பண்ணாதன்னு 1000 தடவை சொன்னேனே.. இப்போ இப்படி ஆகிடுச்சே… நடிகர் சிங்கமுத்து கண்ணீருடன் பேட்டி…!!

நடிகர் மாரிமுத்து உயிரிழப்பு

நடிகர் மாரிமுத்து சினிமாத்துறையிலும், சீரியல் துறையிலும் பிரபலமாகி தற்போது தான் ரசிகர்களிடேயே நல்ல வரவேற்பு பெற்று கொண்டிருந்தார். அவரது வாழ்நாட்களில் இத்தனை நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டு, குறைந்த சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், தற்போது தான் அவருடைய திரை பயணத்தில்  ஓரளவிற்கு வசதி படைத்தவராக வந்தார்.

   

இப்போது அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த, அவருடன் பழகிய பல நடிகர்கள் அவரைப் பற்றிய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிங்கமுத்து அவருடைய கருத்தையும் பதிவு செய்துள்ளார்.

மயில்சாமி அதை செய்து இருக்கணும்.. இறந்துவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவேன்.. சிங்கமுத்து ஆதங்கம்! | Comedy actor Singamuthu opens up about the loss of his dear ...

அப்போது கூறியதாவது, மாரிமுத்துவிடம் அடிக்கடி டென்ஷன் ஆகாத டென்ஷன் ஆகாதன்னு ஒரு ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பேன் என்றார். மேலும் சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் அதிகப்படியான டென்ஷன் ஆகக்கூடிய ஒரு ஆள் நடிகர் மாரிமுத்து மற்றும் சில நிமிடங்களுக்கும் எதற்கு நான் அப்படி கோபப்பட்டேன் என்று அவரே யோசித்துக்கொண்டதும் உண்டு என்று நடிகர் சிங்கமுத்து கூறினார்.

டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்..

ஆனால் இப்போது திடீரென அவர் மரணம் அடைந்த செய்தியை, என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை எனவும் அவருக்கு இரத்த அழுத்தம் அதிமாக இருந்தது. எனவும் கூறியுள்ளார்.  மேலும் அவர், எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், கொம்பனாக இருந்தாலும் மரணத்தின் பிடியில் சிக்கி தான் ஆக வேண்டும். கண்ணீரை அடக்க முடியவில்லை என்று கூறிய சிங்கமுத்து, நிறைய கஷ்டங்கள் பட்ட மாரிமுத்து, சினிமா துறையில் மிகவும் போராடி தற்போது தான் சீரியல் சினிமா என அவருடைய திரை பயணம் வேகம் எடுத்தது. ஆனால் இந்த சமயத்தில் இவனுடைய இறப்பு என்பது என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இவ்வாறு நடிகர் சிங்கமுத்து பேசியிருக்கிறார்.