என் அம்மாவிடம் எவ்வளோ கெஞ்சியும் ஆசை நிறைவேறல.. பிரபல நடிகரை உருகிஉருகி காதலித்தேன்… நடிகை மீனா ஓபன் டாக்..!!

அன்புடன் ரஜினிகாந்த்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்தியாவையும் தாண்டி இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா.

   

அண்மையில் இவரது கணவர் மரணமடைந்த நிலையில், மனதளவில் மிகப்பெரிய வேதனை அடைந்த மீனா, தற்போது தான் அதிலிருந்து மீண்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், மீனா பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன் காதலித்த நபரை பற்றி கூறியுள்ளார். அதாவது பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனை தொடக்கத்தில் உருகிஉருகி காதலித்து வந்தேன் என்றார்.

பின்னர் அவரது திருமண நாளில் அவருக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய நிலையில்,  என் மனம் உடைந்து போனது என்றும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் “எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன், என் அம்மாவிடம் ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்க அம்மா என்றேன்” என்றும் கூறியுள்ளார்.