
நடிகை மீனா
தமிழ் சினிமாவில் 90களில் பிரபல டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் ‘அன்புடன் ரஜினிகாந்த்’ என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன்பின் ஒரு ‘புதிய கதை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் என பலருடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.
இவரது மகள் நைனிகா நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி என்ற படத்தில் நடித்து, பிரபலமானார். பின் சமீபத்தில் மீனாவின் கணவர் இறந்துவிட்டார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், மீனா பிரபல ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், பிரபல பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் பற்றி கூறியுள்ளார். அதாவது “எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும், எனக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன், என் அம்மாவிடம் ரித்திக் ரோஷன் மாதிரி மாப்பிள்ளை பாருங்க அம்மா என்றேன்” என்றும் கூறியுள்ளார். இது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.