புதிய கார் வாங்கிய ‘சார்பட்டா ‘ தனிக்கா… இணையத்தில் அவரே வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்…

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி உள்பட பலர் நடித்த ’சார்பாட்டா பரம்பரை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் இரண்டு பரம்பரைகளுக்கு இடையில் நடைபெறும் பாக்ஸிங் போட்டி பற்றி கதைக்களம் அமைந்துள்ளது. அதன்படி வடசென்னையில் நிறைய பாக்ஸிங் பரம்பரைகள் உள்ளன.

   

இதில் சார்பட்டா பரம்பரைக்கும், இடியாப்ப பரம்பரைக்கும் பல காலமாகப் போட்டி இருக்கிறது. கடைசியில் ஒரு போட்டி, அதில் யார் ஜெயிக்கிறார் என்று பார்த்துக் கொள்வோம். அதில் தோற்றுவிட்டால் சார்பட்டா பரம்பரை இனி சண்டையே போடாது என்று போட்டிக்கு ஒப்புக்கொண்டு வருகிறார் பசுபதி. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதே ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தின் மீதிக் கதை.

இத்திரைப்படத்தில் நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர் இருக்கிறார்கள். கபிலன் கதாபாத்திரத்தில் அற்புதமான நடிப்பைக் கொடுத்துள்ளார் ஆர்யா. அவருடைய திரையுலக வாழ்வில் சிறந்த படங்களில் ஒன்று என்று சொல்லலாம். பசுபதியும், ஜான் விஜய்யும் படத்தின் அடுத்த நாயகர்கள்.

இத்திரைப்படத்தில் வில்லனாக தனிகா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் முத்துக்குமார். தற்பொழுது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து தான் வாங்கிய புதிய காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது வைரலாகி வருகிறது.