இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘பாய்ஸ்’. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல், மணிகண்டன் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஜூ ஜூ என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர் நடிகர் நகுல்.இவர் மும்பையை சேர்ந்தவர்.தந்தை ஜெய்தேவ் தாய் லட்சுமி. இவர் செயின்ட் ஸ்டானிஸ்லாஸ் ஜூனியர் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார்.
அதன் பிறகு ‘பாய்ஸ்’ நடித்தார். இவர் தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நான் ராஜாவாகப் போகிறேன், வலிமை, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் தற்போது ‘வாஸ்கோடகாமா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளியாக வில்லை. இவர் நடிகர் மட்டுமல்ல பின்னணி பாடுகிறோம் கூட. இவர் அன்னியன், கஜினி, வேட்டையாடு விளையாடு, வல்லவன், காதலில் விழுந்தேன், காதலை கோட்டை, கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களில் பாடியுள்ளார்.
இவர் ‘ப்ருத்வி அம்பாருக்கு’ என்ற கன்னடா படத்திற்கு டப்பிங் செய்துள்ளார். இப்படமானது இன்னும் வெளியிடப்படவில்லை. இவர் டான்ஸ் vs டான்ஸ், பிபி ஜோடிகள், சூப்பர் ராணி போன்ற நிகழ்ச்சிகள் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
நடிகர் நகுல் ஸ்ருதி பாஸ்கரை என்பவரை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகிரா என்ற மகளும், அமோர் என்ற மகனும் உள்ளனர். இவர் சோசியல் மீடியா மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் . இவரின் சில குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.