60 வயதில் பிரபல நடிகையை 4 வது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகர்… உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல…

பழங்கால தெலுங்கு நடிகர் கிருஷ்ணா. இவரது மூத்த மகன் நரேஷ் பாபு. தனது தந்தையை போல தெலுங்கு திரையுலகில் தனி இடத்தை பிடித்துள்ளார். அதுபோல அவரது தம்பி மகேஷ்பாபு, இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராகவர். நடிகர் நரேஷ் பாபு ஏற்கனவே திருமணம் 2 திருமணங்களை செய்து கொண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ளார்.

   

இந்த நிலையில் மூன்றாவதாக அவர் ரம்யா ரகுபதியை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. தற்பொழுது இவர் 45 வயது நடிகை பவித்ரா லோகேஷ் உடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறப்பட்டது. பவித்ரா லோகேஷ் கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் கன்னடத்தில் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘வீட்டுல விசேஷம்’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் ராதா மோகன் இயக்கிய கவுரவம், விஷாலின் அயோக்கிய, விஜய் சேதுபதியுடன் க \பெ ரணசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் நரேஷ் பாபு பவித்ரா லோகேஷும் திருமணம் செய்ய போவதாக இணையத்தில் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

புத்தாண்டு முன்னிட்டு இருவரும் முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியிட்டு விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று நரேஷ் – பவித்ரா லோகேஷ் ஜோடிக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. அவர்கள் இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டபோது எடுத்த வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்.

இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வைரலாக்கப்பட்டு  வருகிறது. இதோ அந்த வீடியோ…