வீட்டில் ஏற்பட்ட சோகம்! “குவிய தொடங்கிய பிரபலங்கள்”.. மனமுடைந்த நாசர்..??

  1. இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகர் நாசர். இவர் ஏராளமான படங்களில் வில்லன் மற்றும் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பதை தாண்டி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராகவும் இருந்தவர். தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து பல பணிகளை பொறுப்புடன் செய்து வருகின்றார்.

   

இவரது தந்தை மெஹபூப் பாஷா வயது மூப்பின் காரணமாக நேற்று செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் மறைந்தார். நடிகர் நாசரின் தந்தை நகைகளை பாலிஷ் செய்து வரும் தொழில் செய்தார். இவரது பெரிய கனவே அவரது மகனான நாசரே சினிமாவில் பெரிய நடிகராக மாற்ற வேண்டும் என்பதுதான்.

Avatharam Full Movie HD அவதாரம் நாசர் ரேவதி நடித்த காதல்காவியம் - YouTube

ஆனால் நடிகர் நாசருக்கு இதில் துளி அளவு கூட விருப்பமில்லை. தன் தந்தையின் விருப்பத்திற்கு இணங்க விருப்பமில்லாமல் நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தார். அதன் பின்பு படங்களில் பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காததால்,  தாஜ் ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலை செய்தார்.

பின்னர் அவரது தந்தை கடுமையாக அவரை திட்டியதால் நடிக்க வாய்ப்பு தேடி முயற்சி செய்தன் விளைவாக, தற்போது இந்திய சினிமாவின் மதிப்பிற்குரிய ஒரு நடிகராக அவரை மாற்றி உள்ளது. இந்த பெருமை எல்லாம் அவரது தந்தையே சேரும். எனவே அவரது தந்தையின் மறைவிற்கு அனைவரும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றன.