
நடிகை நீலிமா ராணி
நடிகை நீலிமா ராணி 1992ஆம் ஆண்டு நடிகர் கமல் நடித்த தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதற்கு பின் பல திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான நடிகையானார்.
இவர் அண்மையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மேலும் சமீபத்தில் 1947 என்ற திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்தபோது, இந்த கதை 1947 ஆம் ஆண்டு நடப்பது போல் அமைக்கப்பட்டு இருந்ததால், நடிகை நீலிமா ஜாக்கெட் அணியாமல் நடிக்க வேண்டிய இருந்தது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நீலிமாவிடம், மேலாடை இல்லாமல் நடிச்சது பற்றி உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், உண்மையாகவே மேலாடை இல்லாமல் நடித்த போது அது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை என்றும் நான் பல படங்களில் நடித்தபோது, இயக்குனர் என்ன கேட்கிறாரோ, அதனை அப்படியே செய்வதுதான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை.
மேலும் எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில் அப்படியான காட்சிகளில் நடித்துள்ள நிலையில், எனக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை. இவ்வாறு நீலிமா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.