பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலத்தின் அழகான குடும்பத்தை பார்த்துள்ளீர்களா?… பலரும் பார்த்திடாத அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ…

தமிழ் திரையுலகில் முதன் முதலில் ஸ்டண்ட் மேனாக பணிபுரிந்து வந்தவர் நடிகர் பொன்னம்பலம். இதன்பின் அபூர்வ சகோதரர்கள், நாட்டாமை உள்ளிட்ட பல திரைப்படங்களில்  வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

   

இவர் தனது உடல் அமைப்பு மற்றும் கம்பீரமான பேச்சால் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் பலத்த வரவேற்பை பெற்றார்.

1988 ல் வெளியான ‘கலியுகம்’ திரைப்படத்தில் ஜெயில் கைதியாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.

இவர் தற்பொழுது வரை கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.அந்த நிகழ்ச்சியின் தனது குடும்பம் பற்றி கூறியிருந்தார் நடிகர் பொன்னம்பலம்.

அதன்படி அவரது அப்பாவிற்கு நான்கு மனைவிகள் என்றும், அதில் நான்காவது மனைவிக்குப் பிறந்த ஏழாவது மகன் நான் என்றும் கூறியிருந்தார்.

மேலும் மொத்த கிராமமும் எங்கள் உறவினர்கள் என்று கூறிய அவர், எங்கள் குடும்பம் மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்பொழுது அவரின் சிகிச்சைக்கு கமல் ஹாசன் உதவி செய்தார். நடிகர் பொன்னம்பலத்தின் குடும்ப புகைப்படங்கள் அவ்வளவாக இணையத்தில் வெளியானது கிடையாது.

இந்நிலையில் தற்பொழுது நடிகர் பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.