நடிகர் பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி இவர்தானா?… முதன் முறையாக 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அவரது வீடியோ…

நடனம், நடிப்பு, இயக்கம் என இந்தியா முழுவதும் இன்றளவில் அசத்தி வருபவர் நடிகர்  பிரபுதேவா. ‘இந்தியன் மைக்கேல் ஜாக்சன்’ என ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தமிழில் திரைப்படத்தில் முதலில் நடன கலைஞராக அறிமுகமானார். பின்னர் 1989ல் வெளியான ‘இந்து’ திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

   

இதனை தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இவர் நடிப்பில் வெளியான ‘காதலன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானது. நடிகர் பிரபுதேவா நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வந்தார். இவர் போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

தமிழில் மட்டுமல்லாது ஹிந்திலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். பிரபுதேவா தனது டான்ஸ் குரூப்பில் டான்சராக ஆக பணியாற்றி வந்த ரமலத் என்பவரை காதலித்து 1995 ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2011 இல் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

 

இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். அதில் ஒருவர் உடல் நலக்குறைவால்  உயிரிழந்தார். தனது முதல் மனைவியை 2011ல் விவாகரத்து செய்த பிரபுதேவா பின்னர் பல பிரபலங்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதன்பின்னர் இவர் மருத்துவர் ஒருவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் செய்துள்ளார். ஆம் இவர் முதுகுவலி காரணமாக சில வருடங்கள் அவதிப்பட்ட நிலையில், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் ஒருவர் இவருக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

அவர் மீது காதல் ஏற்பட்ட நிலைியல் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் மனைவியை வெளியே காட்டாமல் இருந்த பிரபுதேவா சில வாரங்களுக்கு முன்பு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடினார். அப்பொழுது பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி வீடியோ கால் மூலம் பேசி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அவரது மனைவி பேசுகையில், ‘உங்களை திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது.

உங்களுடைய ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.நீங்கள் எப்போதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளதாகவும், உங்களை திருமணம் செய்தததை அதிர்ஷ்டமாக கருதுவதாகவும், கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். உங்களை திருமணம் செய்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதற்காக நான் கடவுளுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Prabhu Deva Fans (@prabhu_deva_fans)