பிரகாஷ்ராஜ் போட்ட ட்வீட்…. சர்ச்சையால் கொந்தளித்த நெட்டிசன்கள்… ட்ரோல்களுக்கு அவர் கொடுத்த பதிலடி..!!

பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் மராத்தி மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் வில்லனாக நடித்து அசத்தி இருந்தார். இவர் அரசியலிலும் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர்ந்து பாஜகவையும், அந்த கட்சியின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்து வருகிறார்.

   
சந்திரயான் ட்வீட்..

தற்போது இஸ்ரோ செலுத்தி உள்ள சந்திரயான்-3 விண்கலம் நாளை மாலை நிலாவில் தரையிறங்க உள்ளதால், பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் சந்திரயான்-3யை விமர்சிப்பது போல ஒரு பதிவை போட்டிருக்கிறார். மேலும் அண்மையில் ரஷ்ய விண்கலம் விழுந்து நொறுங்கிய நிலையில், தற்போது சந்திரயான்-3 மீது தான் உலகத்தின் பார்வை இருந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் இஸ்ரோ தலைவர் டீ ஆற்றிகொண்டிருப்பது போன்ற கார்ட்டூன் புகைப்படத்தை பிரகாஷ்ராஜ் பதிவிட்டு உள்ளார். மேலும் அதில் ‘விக்ரம் லேண்டர் முதலில் அனுப்பிய புகைப்படம்’ எனவும் பதிவிட்டு உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் மோடியை விமர்சிக்க தான் இவர் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் என்கின்றனர். இருந்தாலும் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளது, இந்திய விஞ்ஞானிகளை அசிங்கப்படுத்தும் வகையில் இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர்.

பதிலடி

அந்த வகையில் பிரகாஷ்ராஜை தாக்கி பல மோசமான ட்ரோல்கள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் இதற்கு “இது ஆர்ம்ஸ்ட்ராங் காலத்து ஜோக். கேரள சாய்வாலாவை கொண்டாட இந்த பதிவை போட்டேன். உங்களுக்கு எந்த சாய்வாலா தெரிந்தார்?.. உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால், அந்த ஜோக் உங்களை பற்றியதா.. வளருங்க” என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதோ அந்த பதிவு,