தலைமறைவாகியுள்ள நடிகர் ஆர் கே சுரேஷின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா?… இதோ புகைப்படம்…

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வருபவர் ஆர். கே. சுரேஷ். இவருக்கு தயாரிப்பாளர் மது உடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணமானது. இதை அடுத்து ஆர்கே சுரேஷ் மது தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தையின் பெயர் இஷார்யா சுரேஷ்.

   

இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த நடிகர் ஆர் கே சுரேஷின் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நாம் கேள்விப்பட்டிருப்போம் நடிகர் ஆர் கே சுரேஷ் தலைமறைவாக தற்பொழுது இருக்கிறார் என்று. இவர் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் மோசடி வழக்கில் சிக்கி தான் தற்பொழுது தலைமறைவாக உள்ளார்.

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்ய இப்போது ஏமாந்துள்ளனர்.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அப்படி செய்த விசாரணையில் தற்போது நடிகரும், பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷிற்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அவரை விசாரிக்க போலீசார் முயன்றபோது அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஆர் கே சுரேஷின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.