
ஜெயிலர் படம்
தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்பட்ட நிலையில், ரஜினி நடிப்பில் உலகெங்கும் நேற்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அமோக வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நேற்று முதல் நாள் வசூலே எதிர்பாக்காத உச்சத்தை தொட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினி மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இவ்வாறாக ஜெய்லர் படத்தின் வெற்றி ஒரு பக்கம் இருக்க, சில நாட்களுக்கு முன் ரஜினி இமயமலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியானது.
இமயமலையில் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அங்கு செல்லாமல் இருந்ததாகவும், இந்த ஆண்டு அங்கு செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. எனவே நடிகர் ரஜினி கடந்த சில நாட்களுக்கு முன் இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மேலும் அங்கு சில நாட்கள் இருந்து பத்ரிநாத், கேதார்நாத் மற்றும் பாபாஜி குகை போன்ற இடங்களுக்கு செல்ல இருக்கிறார். தற்போது நடிகர் ரஜினிகாந்த் இமயமலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,