
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை சன் பிச்சர்ஸ் தயாரித்தனர்.

மேலும் அனிருத் இசையமைத்திருந்தார். இந்நிலையில் ஜெயிலர் படம் உலகளவில் இதுவரை ரூ. 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கத்தில் “லால் சலாம்” என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கிரிக்கெட்டை மையாமாக வைத்து உருவாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இந்த படம் டிசம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்காக, ரஜினிகாந்த் ரூ. 40 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதை கேட்ட தயாரிப்பாளர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
