இமயமலையில் சுதந்திர தினத்தை நண்பர்களுடன் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த்.இவர் ஆரம்பத்தில் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்துடன்சென்னை வந்த இரஜினிகாந்து, தன் நண்பர் ராச பகதூரின் உதவியுடன் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

   

இவர்  1976 ஆம் ஆண்டு வெளியான ‘மூன்று முடிச்சு’ என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.அதை  தொடர்ந்து இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான படம் ‘ஜெயலர்’   இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் ,சரவணன், யோகி பாபு ,தமன்னா, சிவராஜ்குமார், அறந்தாங்கி நிஷா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.இப்படத்தை  இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார்.

இதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இப்படமானது ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.நடிகர் ரஜினி ஒவ்வொரு படமும் வெளியாகும் போது இவர் இமயமலைக்கு பயணம் செய்வதை சில வருடங்களாக கடைபிடித்து வருகிறார்.

தற்போது சூப்பர் ஸ்டார் நான்கு வருடங்களுக்கு பிறகு இமயமலை சென்றுள்ளார்.  இவர் இமயமலை சென்றது நாம்  அனைவருக்கும் அறிந்து ஒன்று.நேற்று  சுதந்திர தினத்தை முன்னிட்டு  இமயமலையில் நண்பர்களுடன் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி உள்ளார். தற்போது இந்த புகைப்படங்களானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.