விஜகாந்த் மறைவிற்கு வடிவேலு இதையாவது செய்திருக்கலாம்.. ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் ரஞ்சித்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் தான் மறைந்த நடிகர் விஜயகாந்த். இவர் நல்ல நடிகர் என்பதை விட  ஒரு சிறந்த மனிதர் என்று கூட கூறலாம். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் காலமானார். இவரின் இறுதி சடங்கு சுமார் 15 லட்சம் பேர் பங்கேற்றதாக பிரேமலதா விஜயகாந்த்  அறிவித்து இருந்தார்.

   

இந்நிலையில் இவரின் இறுதி சடங்கு நேரில் வர முடியாத பிரபலங்கள் இப்போது அவரை அடக்கம் செய்த இடத்தில் வந்து வணங்கி வருகிறார்கள். ஆனால் விஜயகாந்த் இறுதி ஊர்வலத்திற்கு வராத, ஒரு அறிக்கை கூட விடாத வடிவேலு பற்றி தான் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சமீபத்தில்   நடிகர் ரஞ்சித் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது இந்த உலகத்திற்கும் யாரும் எதிராளி கிடையாது.

நான் வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சனையை  செல்ல வில்லை எதிரியாக இருந்தாலும் இறந்து விட்டால் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவது தான் தமிழர்களின் பழக்கம். நேரில் செல்ல முடியவில்லை என்றால் கூட ஒரு அறிக்கையாவது விட வேண்டும். ஆனால் , நடிகர் வடிவேலு ஒரு அறிக்கையாவது விட்டிருக்க வேண்டும். அதையும் அவர் செய்யாதது தவறான விஷயம் என்றும்  கூறியுள்ளார்.