‘தனுஷுக்கும் அந்த பழக்கம் இருந்தது’… பொது இடத்தில் உண்மையை உளறிய பிரபலம்… ஷாக்கில் ரசிகர்கள்….

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

   

தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் , நானே வருவேன், வாத்தி திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இவர் நடிப்பில் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தோடு இணைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. தற்பொழுது நடிகர் தனுஷை பற்றி நடிகர் ரோபோ சங்கர் பொது இடத்தில் பகிரங்கமான தகவலை கூறியுள்ளார்.

தனுஷ் உடன் மாரி திரைப்படம் உட்பட பல திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் தற்பொழுது தான் குடிப்பழக்கம் காரணமாக மிக அபாயமான கட்டத்திற்கு சென்று, அதில் இருந்து தற்போது விலகி தனது உடலை தேற்றி வருகிறார். இந்நிலையில் அவர் நடிகர் ‘தனுஷுக்கும் இந்த குடிப்பழக்கம் இருந்தது என்றும், ஆனால் அவர் அதை விட்டு விட்டதாகவும்’ கூறி தற்பொழுது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் .