குலதெய்வம் கோயிலுக்கு மனைவி, மகள், வருங்கால மருமகன் என குடும்பத்தோடு திடீர் விசிட்அடித்த நடிகர் ரோபோ சங்கர்…  இதுதான் காரணமா?…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

   

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார்.  இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகளான இந்திரஜா ஷங்கர் திரையுலகில் கால் பதித்து பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நடிகை இந்திரஜா ஷங்கர் டாக்டர் கார்த்திக் என்பவரை காதலித்து வருகிறார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் கூறவே விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா சங்கர். இவர் தற்பொழுது தனது கணவர், மகள், வருங்கால மருமகன் மற்றும் மாமியார் என தனது மொத்த குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட்ட அழகிய வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.  ‘தங்கள் மகளின் திருமணத்தை ஒட்டி தான் இந்த வழிபாடா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இதோ அந்த வைரல் வீடியோ…

https://www.instagram.com/reel/Cts0q9oMq9w/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==