’90ஸ் பெண்களின் கனவு நாயகன்’… பிரபல நடிகருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ரோபோ சங்கரின் மனைவி…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரோபோ சங்கர். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் காமெடியனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து தொகுப்பாளராகவும், நடன கலைஞராகவும் பணியாற்றி வந்தார்.  

   

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து தற்போது கலக்கி வருகிறார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் விஜய், அஜித், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வந்து கொண்டுள்ளார். நடிகர் ரோபோ ஷங்கர்  தற்பொழுது மிகவும் ஒல்லியாகி காணப்படுகிறார்.

இவர் பிரியங்கா என்ற நடன கலைஞரை காதலித்து 2002ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர். இவர் தற்பொழுது நடிகர் ராமராஜனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

மேலும் அவர் அந்த பதிவில்’ 90ஸ்  இளவட்ட பெண்களின் நாயகன், அந்த காலகட்டத்தில் தொடர் வெள்ளிவிழா படங்களைத் தந்த கதாநாயகன், கிராமத்து பெண்களின் கனவுக்கண்ணன்  ராமராஜன் சார் அவர்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 90ஸ் ரசிகையாக நான்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்….