ஆபாச படம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டு தலையிட வேண்டும்…? “நடிகை ரோஜாவுக்காக”…! நடிகை மீனா ஆவேச பேட்டி..!!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டு சுற்றுலாத்துறை அமைச்சராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் சந்திரபாபு நாயுடு பற்றி நடிகை ரோஜா விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பதிலடியாக தெலுங்கு தேச கட்சியின் மூத்த தலைவரான பண்டாரு சத்திய நாராயணமூர்த்தி என்பவர் நடிகை ரோஜாவை  மோசமான வார்த்தைகள் மூலம் தாக்கி பேசியிருந்தார்.

   

அப்போது அவர் பேசியதில், ஆபாச படத்தில் நடித்த ரோஜா என்றும் அந்த படத்தை நான் வெளியிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. இவரது பேச்சு பெரும் பரபரப்பு ஏற்படுத்தியதோடு, நடிகை ரோஜாவையும் மன வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பல சினிமா பிரபலங்கள் ரோஜாவுக்கு ஆதரவாகவும் பேசி வரும் நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன், ராதிகா, குஷ்பூ ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை நவ்தீத் கவுர் மற்றும் மீனா ஆகியோர் ரோஜாவுக்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளனர். நடிகை நவ்தீத் கவுர் பேசியுள்ளதாவது, “பண்டாரு! உங்களுக்கு வெட்கம் இல்லையா? என்றும் மந்திரி ரோஜாவை இந்த அளவு  கீழ்த்தரமாக பேசுகிறீர்களே? என்றும் கேட்டுள்ளார்.

மேலும் உங்கள் வீட்டில் மனைவி, மகள், சகோதரி இப்படி யாரும் இல்லையா? தெலுங்கு மாநிலங்களில் பெண்களை கவுரவிப்பார்கள் என்று தான் கூறுவார்கள். ஆனால் நீங்கள் பெண்களின் கவுரவத்தை குறைத்து கேவலமாக பேசி உள்ளதை நானும் கண்டிக்கிறேன். எனவே ரோஜாவுக்கு ஆதரவாக நானும் இருப்பேன் என்று கூறியுள்ளார். நடிகை நவ்தீத் கவுர் தமிழ் சினிமாவின் அம்பாசமுத்திரம் அம்பானி அரசாங்கம் மற்றும் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இதேபோல் நடிகை மீனா கூறியுள்ளதாவது, பண்டாரு சத்யநாராயணன் தெரிவித்த கருத்து கேட்ட எனக்கே கோபம் வந்தது. வாழ்க்கையில் ஒரு பெண் முன்னேறும்போது இப்படி பேசுவீர்களா? என்றும் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு ரோஜாவிற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்றார்.”