கிழக்கு சீமையிலே படத்தில் ஆத்தங்கர மரமே பாடலில் வந்த ஹீரோனியா இது..? மாடர்ன் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!!

கிழக்கு சீமையிலே

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில், 1993 ஆம் ஆண்டு வெளிவந்த கிழக்கு சீமையிலே திரைப்படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா, விக்னேஷ் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் பேச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ருத்ரா.

Aathangara Marame 3D Audio Song | Kizhakku Cheemayile | Must Use Headphones | Tamil Beats 3D - YouTube

   

Aathangara Marame Song Lyrics | Kizhakku Cheemayile Tamil Movie

கேரளாவை சேர்ந்த இவர் ஹீரோனியாக மட்டுமில்லாமல், நடன கலைஞராகவும் திகழ்ந்து வருகிறார். 1991ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து படத்தில் சிறு கதாபாத்திரம் நடித்து தமிழில் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார்.

லேட்டஸ்ட் க்ளிக்

தமிழில் ராமன் அப்துல்லா, பெரிய தம்பி, கள்ளழகர் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் மாடன் உடைகள் அணிந்து இளம் நடிகைகளுக்கு இணையாக போட்டோ சூட்டுகளை வெளியிட்டு வருவது வழக்கம்.

ஆத்தங்கர மரமே பாடலில் வந்த நடிகை ருத்ராவை நியாபகம் இருக்கா.. மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க - விடுப்பு.கொம்

இவர் இறுதியாக தமிழில் ஆர்யாவின் ஓரம் போ படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது மலையாளம் மற்றும் தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் ருத்ராவின் மாடர்ன் உடை புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிழக்கு சீமையிலே பட நடிகையா இவர் என வியப்புடன் ரசித்து வருகின்றனர்.

ஆத்தங்கர மரமே பாடலில் வந்த நடிகை ருத்ராவை நியாபகம் இருக்கா.. மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க - விடுப்பு.கொம்