
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சமந்தா, தற்போது டோலிவுட், பாலிவுட் என கலக்கி வருகிறார். இவர் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் முழுவீச்சில் நடித்து வந்த நிலையில், பின் மயோசிட்டிஸ் என்ற நோயால் கடந்த வருடம் பாதிக்கப்பட்டார். இதனால் நிறைய படங்கள் நடிக்க முடியாமல் போனது.
இந்நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஷிவ நிர்வாணா இயக்கி வரும் இந்தப் படம், வருகிற செப்டம்பர் 1-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
நடிகரின் காதல்
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ – 2 சீரியலில் நடித்த நடிகர் பிரதோஷ், சமீபத்தில் நடிகை சமந்தாவை நேரில் சந்தித்து அவரது காதலை வெளிப்படுத்தி உள்ளார். அதாவது சமந்தாவின் தீவிர ரசிகரான நடிகர் பிரதோஷ், 11 ஆண்டுகளாக சமந்தாவை காதலித்து வருவதாக கூறி, அவருக்கு காதல் பரிசாக அழகிய பிரேஸ்லெட் ஒன்றையும் வாங்கி கொடுத்துள்ளார்.
மேலும் நடிகை சமந்தாவை நேரில் சந்தித்து, இந்த காதல் பரிசையும் கொடுத்த போது சமந்த நெகிழ்ந்து போனார். மேலும் அந்த பரிசையும் அன்போடு ஏற்று கொண்டுள்ளார். இந்த வீடியோவை பிரதோஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி அதிகமான லைக்குகளையும் பெற்று வருகிறது.