
நடிகர் சாந்தனு சக்கரக்கட்டி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பிரபல இயக்குனர் பாக்யராஜின் மகனான சாந்தனு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவரால் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைக்க முடியவில்லை.
சமீபத்தில் வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பேசப்பட்டது. இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தில் தான் நடித்த பல காட்சிகளை நீக்கிவிட்டதாக பேட்டி ஒன்றில் மனம் வருந்தி கூறியிருக்கிறார். சாந்தனு, தெரிவித்திருப்பதாவது, மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரியில் நானும் விஜய் அண்ணாவும் சேர்ந்து வரும் நீண்ட சண்டைக்காட்சி இருந்தது.
அதற்கான படப்பிடிப்பு பாதி நாள் நடந்தது. என்னை வில்லன்கள் தாக்க வரும்போது விஜய் அண்ணா காப்பாற்றுவார். இதை நான் சொன்னால் கூறிக்கொண்டே போகலாம். துணை கதாநாயகன் அளவிற்கு நடித்திருந்தேன். நான் நடித்த பல காட்சிகள் நீக்கப்பட்டு விட்டது என்று வருத்தத்துடன் சந்தனு தெரிவித்திருக்கிறார்.